2020 நவம்பர் 25, புதன்கிழமை

கென்ய இராணுவத் தளம் மீதான தாக்குதலில் ஐ. அமெரிக்கர்கள் மூவர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவின் கரையோர லமு பிராந்தியத்தில், ஐக்கிய அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படுகின்ற இராணுவத் தளமொன்றுக்குள் நேற்று  நுழைந்த சோமாலியாவின் அல்-ஷபாப் குழுவின் இஸ்லாமிய ஆயுததாரிகள், ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் மூவரைக் கொன்றதுடன், சில விமானங்கள், இராணுவ வாகனங்களை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற குறித்த சிம்பா முகாமுக்குள் அதிகாலையில் உயர் பாதுகாப்பை தாக்குதலாளிகள் மீறியபோதும் விரட்டியடிக்கப்பட்டதாகவும் இஸ்லாமிய ஆயுததாரிகள் நால்வர் கொல்லப்பட்டதாகவும் கென்ய இராணுவப் பேச்சாளர் கேணல் பனுல் நிஜுகுனா கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், தாக்குதலில், ஐக்கிய அமெரிக்கப் படைவீரரொருவர், சிவில் பாதுகாப்பு ஒப்பந்தப் பணியாளர்கள் இருவர் உட்பட ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் இருவர் காயமடைந்ததாக மேலதிக தகவல்களெதுவையும் வழங்காமல் அறிக்கையொன்றில் ஐக்கிய அமெரிக்காவின் ஆபிரிக்கக் கட்டளையின் தலைவர் ஜெனரல் ஸ்டீவன் டெளன்ட்சென்ட் கூறியுள்ளார்.

உள்ளக பொலிஸ் அறிக்கையின்படி, செஸ்னா விமானம் இரண்டும், ஐக்கிய அமெரிக்க ஹெலிகொப்டர்கள் இரண்டும், பல ஐக்கிய அமெரிக்க வாகனங்களும் விமான ஓடுபாதையில் அழிவடைந்துள்ளன.

இத்தாகுதலில், ஐக்கிய அமெரிக்கர்கள் 17 பேரையும், கென்யப் படைவீரர்கள் ஒன்பது பேரையும் கொன்றதாக அல்-ஷபாப் உரிமை கோரியிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .