2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

காஸாவுக்கு சென்ற உதவி கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸாவுக்கு மீண்டும் உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலை இஸ்ரேலிய கடற்படையினர் வழிமறித்து கைப்பற்றியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை, கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து  தாக்குதல் நடத்திஅய்கில் 15பேர் பலியாயினர்.

இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பாலஸ்தீனத்துக்கு மீண்டும் உதவிக்கப்பல்களை அனுப்பப்போவதாகவும், அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் தெரிவித்திருந்தது.

அதன்படி, மீண்டும் காஸாவுக்கு அனுப்பப்பட்ட உதவி பொருட்களை இஸ்ரேலிய கடற்படை வழிமறித்ததுடன் கைபற்றியது. கைப்பற்றப்பட்ட கப்பலும், அதிலிருந்த ஊழியர்களும் அஷ்தோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு உரிய அதிகாரிகளின் வசம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

காஸா நோக்கி வந்த மேற்படிக் கப்பலை சுற்றிவளைத்த 4 இஸ்ரேலிய கடற்படை கப்பல்கள், தாங்கள் தடை செய்துள்ள பகுதி வழியாக காஸா செல்லாமல் வேறு வழியாக சென்று அஷ்தோத் துறைமுகத்தை அடையுமாறும், அங்கு பொருட்களை இறக்கி தரை மார்க்கமாக காஸா பகுதிக்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்குமாறும் கேட்டுக்கொண்டன.

ஆனால், அதனை ஏற்க அந்த கப்பலை ஓட்டிவந்தவர்கள் மறுத்ததாலேயே, அதனை கைப்பற்ற வேண்டியதாகிவிட்டது என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--