2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

காஸா உதவி கப்பல்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்; 15 துருக்கியர்கள் பலி

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி நாட்டு உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேலிய கமாண்டோப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலுக்கு த்மது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு துருக்கியை சேர்ந்த 6 கப்பல்களில் உதவி பொருட்களை ஏற்றிச் செல்லப்பட்டன. இந்நிலையில் அந்த கப்பல்களில் சுமார் 600பேர் வரையில் பயணித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இஸ்ரேலின் கப்பற்படை கமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல்கள நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இஸ்ரேலுக்கு கண்டனத்தைத் தெரிவித்த துருக்கி, இஸ்ரேலுக்கான தனது தூதரையும் உடனடியாக திரும்பப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--