2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கிரேக்கத்துக்கான புதிய ஒப்பந்தம்: ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சர்கள் இணக்கம்

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தத்தளித்துவரும் கிரேக்கத்துக்கு, புதிய கடனை வழங்குவதற்கான இணக்கமொன்று, ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் இது, மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தகள், இரவிரவாக இடம்பெற்றன. சுமார் 11 மணித்தியாலங்களின் பின்னர், இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
யூரோ வலய அமைச்சர்கள் 19 பேர் பங்குபற்றிய இந்தக் கூட்டத்தின்போது, 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, புதிய கடன்களின் மூலம் கிரேக்கத்துக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்படுகிறது.

வெளிநாட்டுக் கடன்தருநர்களால் கோரப்பட்டதைப் போன்று, செலவீனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை, கிரேக்க நாடாளுமன்றம் அங்கிகரித்து இரண்டு நாட்களில், இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்போது, கிரேக்கத்துக்கு இறுதியில் கடன் நிவாரணமும் வழங்கப்படுமென, அமைச்சர் தெரிவித்தனர். கட்டங்கட்டமாக இந்தக் கடன் வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர்கள், இதில் சர்வதேச நாணய நிதியமும் இணைந்துகொள்ளுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .