2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

பெகோ சமனின் போனில் நாமலின் பெயர்

Simrith   / 2025 ஒக்டோபர் 23 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

' நாமல் சேர், மகே சேர்  ராஜபக்ச ' என்று பெகோ சமனின் தொலைபேசியில் உள்ளது. அந்த நாமல் இந்த நாமலா அல்லது வேறு  நாமலா என்பது எமக்கு தெரியாது.ஆனால் விரைவில் உண்மை வெளிவரும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற  போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் மற்றும் சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துதல் தொடர்பான  சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  பேசுகையில்,

போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்தப் போவதில்லை. இலகுப்படுத்தப்போவதுமில்லை.

ஐ.ஆர்.சி. ஆவணப்படுத்தலில் 1305/ 2015 கீழ்   'பி' தரத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிக்காகவே எதிர்க்கட்சியினர் இன்று முன்னிலையாகுகிறார்கள்.ஐக்கிய மக்கள் சக்தியின் 35 பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளனர். கொலை செய்யப்பட்டவரை தவிர்த்து மிகுதி 34 பேருக்கு எவ்வித அச்சுறுத்தலும்,பாதிப்பும் ஏற்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X