2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

குழந்தையைக் குணப்படுத்தியது பாப்பரசரின் முத்தமாக, வைத்தியசாலைச் சிகிச்சையா?

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் பிடடெல்பியாவைச் சேர்ந்த குழந்தையொன்று, பாப்பசரர் பிரான்ஸிஸால் முத்தமிடப்பட்ட பின்னர், ஆபத்தான மூளைக்கட்டியை இழந்துள்ளது என்ற செய்தி, அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஊடகங்களின் தகவலின்படி, பிறந்து ஒரு மாதத்திலேயே, கியன்னா என்ற அக்குழந்தையின் மூளையில் கட்டி காணப்பட்டதாதகவும், அதன் காரணமாக அக்குழந்தையின் ஆயுட்காலம் சில மாதங்களே என அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால், இவ்வாண்டு செப்டெம்பரில், தனது முதலாவது பிறந்தநாளை அக்குழந்தை கொண்டாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, அமெரிக்காவுக்கு செப்டெம்பரில் விஜயம் மேற்கொண்ட பாப்பரசர் பிரான்ஸிஸால், அக்குழந்தை முத்தமிடப்பட்ட நிலையில், பாப்பரசரின் முத்தத்தினால், அந்தக் கட்சி மறைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கான்கள், கட்டி மறைந்ததை உறுதிப்படுத்துகின்றன.

எனினும், சில ஆய்வுகளின் பின்னர், அந்தக் குழந்தைக்கு, இவ்வாண்டு பெப்ரவரியில், 8 மணிநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், பிடெல்பியா சிறுவர் வைத்தியசாலையில், தொடர்ச்சியாக வேதிச் சிகிச்சையைப் (Chemotherapy) பெற்றுவந்துள்ளார். இதன் காரணமாகவே, அவரது மூளைக்கட்டியின் அளவு மிகவும் குறைவடைந்து, இல்லாது போகும் நிலையை எட்டியுள்ளதாக, வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .