Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவாட்டமாலாவின் நகரொன்றில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைந்தது 73ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பொதுமக்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
எல் கம்ப்ரே நகரிலுள்ள மலொன்றின் மழையினால் ஈரமடைந்த பகுதியொன்று சரிந்து வீழ்ந்ததில், ஏராளமான வீடுகள் புதையுண்டன. இதில் சிக்கியே, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இந்த மண்சரி இடம்பெற்றதோடு, நேற்றுவரை மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
அத்தோடு, ஏறக்குறைய 600 பேர் காணாமல் போயிருக்கலாம் என, அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். எனினும், உறுதியான இலக்கமொன்று வெளியிடப்படவில்லை.
எல் கம்ப்ரேயில் மண்சரிவொன்று ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டு, எச்சரிக்கை வழங்கப்பட்ட போதிலும், பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago