2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

காஸா மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்

Shanmugan Murugavel   / 2016 மே 26 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட றொக்கெட் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் முகமாக, காஸா நிலப்பரப்பு மீது, இன்று வியாழக்கிழமை காலை நேரத்தில், விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தெற்கு இஸ்ரேலிலுள்ள வெளியான நிலப்பரப்பின் மீது இந்த றொக்கெட் தாக்கியதுடன், எந்தவித பொருட் சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
இதனையடுத்து, காஸாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஹமாஸ் அமைப்பின் இரண்டு இலக்குகள் மீது, இஸ்ரேலிய விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

இராணுவத்தின் அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து காஸா நிலப்பரப்பிலிருந்து, 9 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. அத்தோடு, காஸாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் அனைத்துக்கும், ஹமாஸையே பொறுப்பாகக் கொள்வதாகவும் இராணுவம் தெரிவித்தது.

பலஸ்தீன பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்தின்படி, நுஸெய்ரத், றபா பகுதிகளிலிருள்ள ஹமாஸின் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் அதிகரித்துள்ள முரண்பாடுகள் காரணமாக, 2014ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, 2,251 பலஸ்தீனர்களும் 73 இஸ்ரேலியர்களும் இதுவரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .