2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

சீன மீன்பிடிப் படகை மூழ்கடித்தது ஆர்ஜென்டீனா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 17 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்ஜென்டீன கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீனக் கப்பலொன்றை துரத்திச் சென்ற ஆர்ஜென்டீன கரையோரக் காவற்படையினர், அதை மூழ்கடித்துள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த  லு யன் யுவான் யு 010 என்ற படகை நோக்கி, தமது கப்பல்களில் ஒன்று எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக அறிக்கையொன்றில் கரையோரக் காவற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில், ரேடியோ மூலம் தொடர்பை ஏற்படுத்த முனைந்ததாக தெரிவித்த கரையோர காவற்படையினர், அக்கப்பலில் இருந்த 32 மாலுமிகளையும் மீட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமை தொடர்பில் தீவிர கரிசனையை சீனா வெளிப்படுத்தியுள்ளது. ஆர்ஜென்டினாவிடமிருந்து முழுமையான விசாரணைகளை சீனா கோரியுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லு கங் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .