Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூலை 12 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரிய படுகொலைகள், கட்டாயப்படுத்தப்பட்ட வெளியேற்றங்கள், நிலங்கள் தொடர்பான முரண்பாடுகள் ஆகியன காரணமாக, சிறுபான்மையினரும் பழங்குடியினரும், தங்களது பூர்வீக இடங்களிலிருந்து இல்லாதொழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சிறுபான்மைக் குழுமங்கள் தொடர்பான உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பான சிறுபான்மை உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்ட 1960களில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, "உலகின் சிறுபான்மை, பழங்குடி மக்களின் நிலை - 2016" எனத் தலைப்பிடப்பட்ட தனது வருடாந்த அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
எதியோப்பியாவிலிருந்து சீனாவிலிருந்து ஈராக்கிலிருந்து சிரியா வரை, ஆயுத முரண்பாடுகளும் காணி உடைமைகள் பறிக்கப்படுதலும் காரணமாக, சிறுபான்மைக் குழுக்களின் ஒடுக்குமுறைக்கு வித்திடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அந்த அறிக்கை, இதன் காரணமாக கலாசாரச் சொத்துகளும் அழிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
சிறுபான்மைக் குழுமமொன்று தனது நிலத்திலிருந்து விரட்டப்பட்ட பின்னர், அவர்களது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்கப்பதற்கும் அக்கலாசாரங்களை அடுத்த சந்ததிக்கு அனுப்புவதற்கும், அக்குழு கடுமையான சவாலை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையின்படி, சுய நிர்ணய உரிமைக்கான முரண்பாடுகள், உலகிலுள்ள 17 நாடுகளில் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. 19 நாடுகளில் பாரிய ஆயுத முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோல், 1945ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகிலுள்ள 30 நாடுகளில் இனவழிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கதாக, இந்தியாவிலுள்ள அசாமிகள், போடோஸ், நாகர்கள், திரிபுராஸ், ஏனைய ஆதிவாசிகள், காஷ்மிரிகள், சிக்குகள், முஸ்லிம்கள், தலித்கள் ஆகியோர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சிறுபான்மைக் குழுக்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago