2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜப்பானின் புதிய பிரதமர் நவோடோ கானுக்கு பராக் ஒபாமா வாழ்த்து

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும்  நவோடோ கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஒத்துழைப்பை பேணும் அதேவேளை, ஒக்கினாவாவிலுள்ள அமெரிக்க இராணுவத்தினர் மீதான  பதட்ட நிலைமையை தவிர்க்குமாறும் இதன்போது பராக் ஒபாமா கோரிக்கை விடுத்தார்.

ஜப்பானின் முன்னாள்  பிரதமர் யுக்கியோ ஹட்டோயாமா தனது பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்தே, நவோடோ கான் புதிய பிரதமராக பதவியேற்றிருந்தார்.
 
ஒக்கினாவாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதன் காரணமாகவே ஜப்பானின் முன்னாள்  பிரதமர் யுக்கியோ ஹட்டோயாமா தனது பதவியை இராஜினாமாச் செய்ததிருந்தார். 
 
ஹட்டோயாமா 8 மாதங்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--