Shanmugan Murugavel / 2016 ஜூலை 11 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பொருளாதாரக் கொள்கைகளை வாக்காளர்கள் ஆதரித்துள்ளதாகத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நாடாளுமன்றத்தின் மேலவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, 121 ஆசனங்களுக்காக இடம்பெற்ற தேர்தலில் அபேயின் கூட்டணி பெரும்பாலான ஆசனங்களை வென்று தமது பெரும்பான்மையை அதிகரித்துக் கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.
கீழவையில் காணப்படும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அபே பெறுவாரானால், இராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதை தளர்த்துவதற்கான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாக்கெடுப்பை அபே நடாத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபேயின் லிபரல் ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கொமெய்ட்டோ கட்சி ஆகியன, 67 தொடக்கம் 76 ஆசனங்களைக் கைப்பற்றும் என அரச ஊடகமான என்.எச்.கே தெரிவித்துள்ளது. மேலவையின் அடுத்த அரைப் பகுதி ஆசனங்களில், மேற்படி கூட்டணி, ஏற்கெனவே 77 ஆசனங்களைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலகப் போரில் 70 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் தோல்வியடைந்தபோது, அமெரிக்காவால் பிரயோகிக்கப்பட்ட, pacifism என்ற சரத்தின் மூலம் ஜப்பான் வெளிநாடுகளில் போர்புரிவதைத் தடுக்கும் ஒன்பதாவது உறுப்புரையை அபே மாற்ற விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 minute ago
26 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
43 minute ago
49 minute ago