2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

டொனார்டோக்களால் குறைந்தது 25 பேர் டெனிஸியில் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸி மாநிலத்தின் தலைநகர் நஷ்வில்லி மற்றும் சூழவுள்ள கவுண்டிகளை டொனார்டோக்கள் நேற்று  அதிகாலையில் தாக்கிய நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தகர்ந்த கட்டடங்கள், சிதைவுகளுக்குள் காணாமல் போனோரை தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தேடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக டெனிஸி மாநில ஆளுநர் வில்லியம் லீ தெரிவித்துள்ளார்.

டெனிஸி மாநிலத்தில் எத்தனை பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மதிப்பிட வில்லியம் லீ மறுத்திருந்தார்.

கொல்லப்பட்ட 25 பேரில் 19 பேர், நஷ்வில்லிக்கு கிழக்காகவுள்ள புட்னம் கவுண்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மிஸூரி, டெனிஸி, கென்டக்கியை எட்டு டொனார்டோக்கள் தாக்கியதாக நம்பப்படுவதாகத் தெரிவித்துள்ள தேசிய வானிலைச் சேவை, மேலதிக ஆய்வில் எண்ணிக்கை மாறுபடலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், எத்தனை டொனார்டோக்கள் நஷ்வில்லியை நேரடியாகத் தாக்கின என்பது தெளிவில்லாமலுள்ளது.

இதேவேளை கொல்லப்பட்டோர் தவிர குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். நஷ்வில்லியில் 48 கட்டடங்கள் அழிவடைந்துள்ளதுடன், பல சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் வில்லியம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X