2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

டிரினிடாட் பிரதமராக இந்திய வம்சாவளி பெண்மணி

Super User   / 2010 மே 27 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான டிரினிடாட்னின் பிரதமராக கமலா பிரசாத் பிசேசர் என்னும் பெண்மணி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

58 வயதுடைய இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவரது 5 கட்சி கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், இதுவரை காலமும் பிரதமராக இருந்த பேட்ரிக் மன்னிங் தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகியுள்ளார்.

டிரினிடாட் நாட்டில் ஆபிரிக்காவிலிருந்து குடியேறிய மக்களும், இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களுமே அதிகமாக வசித்து வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--