Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள டலஸில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் அதிகாரிகள் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு, மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
டலஸ் பொலிஸ் தலைமையகத்தில், வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்துக்குரிய நபரொருவர் காணப்படுவதாக அநாமதேயத் தகவல் கிடைத்ததையடுத்தே, அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு, இரண்டு மணிநேரங்களாக அங்கு பாரிய தேடுதல் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் ஆபத்து நிலைமைகள் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டது.
கறுப்பினத்தைச் சேர்ந்த இருவர், கடந்த புதன்கிழமையன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்தையடுத்து, அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தக் கொலைகளுக்கு எதிராக, ‘கறுப்பின உயிர்கள் பெறுமதியானவை” அமைப்பின் ஆதரவாளர்கள், அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை, கடந்த வியாழக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.
எனினும், அந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மீது ஸ்னைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸாரில் ஐவர் கொல்லப்பட்டதோடு, ஏழு பேர் காயமடைந்தனர். மேலும், பொதுமக்களில் இருவரும் காயமடைந்தனர். பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், செப்டெம்பர் 9, 2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்ட நபர், மிக்கா எக்ஸ் ஜோன்சன் என, அதிகாரிகளால் இனங்காணப்பட்டுள்ளார். இவர், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய 'கறுப்பின உயிர்கள் பெறுமதியானவை" அமைப்பு, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
30 Oct 2025
30 Oct 2025