Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 31 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் உடைய முன்னணி உதவியாளர்களுக்கான அறிக்கையில், ஐக்கிய அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான தாட்-டுக்காக, நான்கு மேலதிகமான செலுத்திகள் தரையிறக்கப்பட்டதை, தென்கொரிய பாதுகாப்பமைச்சு வேண்டுமென்றே குறிப்பிடவில்லை என, ஜனாதிபதி மூனின் அலுவலகம், இன்று (31) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பமைச்சில் விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டுள்ள மூன், புதிய அரசாங்கத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல், செலுத்திகள் கொண்டுவரப்பட்டது, மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளதாகத் தெரிவித்ததாக, தென்கொரிய ஜனாதிபதி மாளிகையான நீல மாளிகையின் பேச்சாளர் யூன் யங்-சான், நேற்று (30) கூறியிருந்தார்.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான, ஜனாதிபதி மூனின் சந்திப்புக்காக, புதிய அரசாங்கம் தயாராகும்போது, கடந்தவார அறிக்கையொன்றில், தாட் அமைப்பின் மின்கலம் பற்றிய தகவல்களை, பாதுகாப்பு அமைச்சு வேண்டுமென்றே தவிர்த்ததாக, யூன் கூறியுள்ளார்.
பாதுகாப்பமைச்சின் முன்னைய அறிக்கையில், தரையிறக்கத்துக்கு தயாராகும் செலுத்திகளின் மொத்த எண்ணிக்கையும், நான்கு செலுத்திகள் இருந்த ஐக்கிய அமெரிக்க இராணுவத் தளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், ஆனால், நீல மாளிகைக்கு இறுதியாக அனுப்பப்பட்ட அறிக்கையில், அந்தத் தகவல்கள் நீக்கப்பட்டதாக யூன் கூறியுள்ளார்.
இந்நிலையில், தாட் தரையிறக்கம் குறித்து, தென்கொரிய அரசாங்கத்துடன், மிகவும் வெளிப்படையாக இருப்பதாக, பென்டகன் தெரிவித்துள்ளது.
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago