2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

தாய்.முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

Super User   / 2010 மே 25 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

தாய்லாந்து தலநகர் பாங்கொக்கில் அண்மைக்காலமாக இடம்பெர்றுவருகின்ற செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் குறித்த முன்னாள் பிரதமரே இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையிலேயே அந்நாட்டு நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த 2 மாதங்களாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .