2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

துருக்கி வசமானது அஃப்ரின் நகரம்

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள அஃப்ரின் நகரம், துருக்கிப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கீழ் வந்துள்ளது என, துருக்கி அதிகாரிகளும் இராணுவத்தினரும் அறிவித்துள்ளனர். நகரத்தின் நடுப்பகுதிக்குள் சென்ற துருக்கிப் படையினர், அங்கு தமது நாட்டுக் கொடிகளை நாட்டி, தமது கைப்பற்றலைப் பிரகடனப்படுத்தினர்.

சிரிய - துருக்கி எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஃப்ரின் மாவட்டம் மீதான தமது இராணுவ நடவடிக்கையை, 8 வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்த துருக்கி, அம்மாவட்டத்தின் பிரதான நகரான அஃப்ரின் நகரைக் கைப்பற்றியுள்ளமை, முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை நேரத்தில், அஃப்ரின் நகரத்துக்குள் துருக்கிப் படையினர் நுழைந்தனர் எனவும், எதிர்ப்பெதனையும் துருக்கிப் படையினர் சந்திக்கவில்லை எனவும், எதிரணிப் போராளிகள் தெரிவித்தனர். மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவிக்கும் போது, பின்வாங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவை, குர்திஷ் ஆயுததாரிகளில் சிலர் மறுத்து, இராணுவ எதிர்ப்பை வழங்கிய போதிலும், துருக்கிப் படையினரின் கட்டுப்பாட்டில் அஃப்ரின் நகரம் வந்துள்ளது என்றும் தெரிவித்தது.

ஒரு காலத்தில், சிரியாவில் மிகவும் ஸ்திரமான பகுதியாகக் காணப்பட்ட அஃப்ரின் நகரம், தற்போது மோதலுக்கு உள்ளாகி, ஒரு பகுதியில் துருக்கிப் படையினரும் மறுபக்கத்தில் குர்திஷ் ஆயுததாரிகளும் காணப்படுகின்றமை, 7 ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய யுத்தத்தில், புதிய சிக்கலை வழங்கியுள்ளது எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .