2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) மாநில தலைவர் பதவியை நடிகர் ரஜினிகாந்த் ஏற்றுக் கொள்ளமாட்டார் என தமிழ்நாட்டின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த திருநாவுக்கரசர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களின் விமர்சனமானது மத்திய பா.ஜ.க அரசாங்கத்தை சந்தோஷப்படுத்தத்தான். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காக மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

பா.ஜ.கவில் உறுப்பினராக இல்லாதவர், அக்கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்க முடியுமா? பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியெல்லாம் ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்ளமாட்டார். பா.ஜ.க தேசியத் தலைவர் பதவி கொடுத்தால் கூட ரஜினி அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே” எனக் கூறினா.ர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .