Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gopikrishna Kanagalingam / 2017 மே 21 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில், தலிபான்களால் மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 20 பொலிஸார் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில், ஆயுததாரிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஸபுல் மாகாணத்திலுள்ள ஷா ஜொய் மாவட்டத்திலேயே, இந்தத் தாக்குதல், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித் மாகாணத்தின் ஆளுநர் பிஸ்முல்லா ஆப்கன்மால், “எங்களிடம் தற்போதுள்ள அறிக்கையின்படி, 20 பொலிஸார் வீரமரணம் அடைந்துள்ளதுடன், மேலும் 10 பேர், காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்” என்று தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலில், டசின்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் பிஸ்முல்லா தெரிவித்த போதிலும், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என, உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் பாக்தியா மாகாணத்தின் வங்கியொன்றில், நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், தாக்குதலாளிகள் மூவர் உட்பட அறுவர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக, தலிபான், இன்று அறிவித்தது.
மேற்கத்தேயத்தால் ஆதரவளிக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிராக, கடந்த 16 ஆண்டுகளாகப் போராடிவரும் தலிபான் அமைப்பு, அண்மைக்காலத்தில், தமது தாக்குதல்களை அதிகளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
45 minute ago