2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

‘தொண்டு அறக்கட்டளையை மூட எண்ணுகின்றேன்’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 25 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆதாய முரணைத் தவிர்ப்பதற்காக, சர்ச்சைக்குரிய தனது அறக்கட்டளையை கலைக்கவுள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், நேற்று (24) தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விசாரணையொன்றினால், அறக்கட்டளையை கலைக்கும் ட்ரம்பின் முடிவு சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அடுத்த வாரங்களில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலுள்ள ட்ரம்பின் உடமைகள், வியாபாரங்கள், சொத்துகள் மற்றும் ட்ரம்ப் அறக்கட்டளை என்பன அதிகம் கவனிப்புக்குள்ளாகியிருந்தன.

இந்நிலையிலேயே, தோன்றக்கூடிய ஆதாய முரண்பாடுகளைத் தவிர்க்கும் முதலாவது பாரிய நடவடிக்கையாகவே, ட்ரம்ப்பின் அறக்கட்டளையை மூடும் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

ஏனெனில், எவ்வளவு பணத்தை, ட்ரம்ப் உண்மையாக தனது அறக்கட்டளைக்கு வழங்கினார் என்பது உள்ளடங்கலாக சில சர்ச்சைகளின் மையமாக ட்ரம்பின் தனிப்பட்ட அறக்கட்டளையே விளங்குகிறது. அறக்கட்டளைக்குக்கு ட்ரம்ப் எவ்வளவு பணத்தை உண்மையாக வழங்கினார் என்பது, நியூயோர்க் சட்டமா அதிபர் எரிக் ஷனெய்டெர்மானின் விசாரணையின் கீழ் உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்க ஊடகங்களுக்கு, சட்டமா அதிபர் அலுவலகம், நேற்று முன்தினம் பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், அறக்கட்டளையை தற்போது மூட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தின் விசாரணையின் கீழ் ட்ரம்ப் அறக்கட்டளை உள்ளது எனத் தெரிவித்த ஷனெய்டெர்மானின் பேச்சாளர் பெண்மணி அமி ஸிபிட்டால்னிக், விசாரணை முடிவடையும் வரை சட்ட ரீதியாக அறக்கட்டளையை கலைக்க முடியாது எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .