2021 மே 06, வியாழக்கிழமை

தென்கொரியரை நாடு கடத்துகிறது வடகொரியா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவனொருவரை, வடகொரியச் சிறையிலிருந்து விடுவித்து, நாடு கடத்தவுள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது.

ஜூ வொன்-மூன் என்ற 21 வயதான இம்மாணவன், அமெரிக்காவின் நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்ததோடு, அமெரிக்க கிறீன் கார்டையும் கொண்டவராவார்.

வடகொரிய எல்லைக்குள் சட்டரீதியற்றுப் புகுந்தார் எனத் தெரிவித்து, இவ்வாண்டு ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததோடு, வாழ்நாள் கடூழியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே, அவரை விடுதலை செய்வதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் அதிகரித்த முரண்பாடுகளைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

இவர்களின் விடுதலையை வரவேற்றுள்ள தென்கொரியா, வடகொரியச் சிறைகளில் வாடும் மேலும் மூன்று தென்கொரியர்களையும் ஒரு கொரிய - அமெரிக்க பாதிரியாரையும் விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .