2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

தாய்லாந்தில் ஊடகவியலாளரும் செயற்பாட்டாளர் நால்வரும் கைதாகினர்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் புதிய அரசியலமைப்பை விமர்சித்த தாய்லாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், செயற்பாட்டாளர்கள் நால்வர் ஆகியோர் மீது, அந்நாட்டில் காணப்படும் சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அடுத்த மாதம், இந்த அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையிலேயே, இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

தாய்லாந்தின் ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்த ஆட்சி மீது விமர்சனங்களை முன்வைக்கும் முக்கிய குழுவான புதிய ஜனநாயக இயக்கத்தைச் சேர்ந்த நான்று செயற்பாட்டாளர்களும், பிரச்சட்டார் என்ற ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வஜன வாக்கெடுப்புச் சட்டமூலத்தின் கருத்திரை 61இல் பிரிவு 2-ஐ, அவர்கள் மீறியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரியொருவர், அவர்களின் என்ன நடத்தை காரணமாக இவ்வாறு குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .