Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 16 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கி இராணுவத்தின் பிரிவொன்று இராணுவத்தை கவிழ்க்க முயற்சித்த சில மணித்தியாலங்களில், இஸ்தான்புல் பிரதான விமானநிலையத்தில் இன்று சனிக்கிழமை காலையில் ஆதரவாளர்கள் குழுவொன்றினுள் ஜனாதிபதி றெசெப் தயீப் எர்டோவான் தோன்றிய காணொளி உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
துருக்கி, பெரும்பாலாக கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் பினாலி யில்ட்ரிம் தெரிவித்த பின்னரே இஸ்தான்புல்லுக்கு எர்டோவான் வந்தடைந்துள்ளார். ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னால் உள்ளவர்கள் பாரிய விலையை செலுத்த வேண்டியிருக்கும் என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த எர்டோவான், தனது மக்களுடனேயே தான் இருக்கப் போவதாகவும் எங்கும் செல்லப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
120க்கு மேற்பட்டோர், ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக யில்ட்ரிம் தெரிவித்துள்ளதோடு, அவர்களில் பெரும்பாலோனோர் இராணுவ அதிகாரிகள் என எர்டோவான் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு, இராணுவத்தின் பிரிவொன்று உத்தியோகபூர்வ,மாக ஆட்சிக் கவிழ்ப்பையும் இராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்து, தாங்கள் நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அறிவித்த நிலையில், இஸ்தான்புல் பிரதான விமானநிலையம் மூடப்பட்டதுடன், வானில் போர் விமானங்கள் காணப்பட்டிருந்தன.
துருக்கியின் புலனாய்வு முகவரகம் MIT, கடத்தப்பட்ட ஹெலிஹொப்டர்களால் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததாக அதன் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
யில்ட்ரிமின் அறிவிப்பு வெளிவந்த பின்னரும், மத்திய இஸ்தான்புல்லில், பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் இரண்டு கேட்டதுடன், தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago