2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

'தாவூத் இப்ராஹிமுடன் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு'

Shanmugan Murugavel   / 2016 மே 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவால் தேடப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான தாவூத் இப்ராஹிமுடன், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து அரசியல்வாதிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதில், மஹாராஸ்திராவைச் சேர்ந்த அமைச்சரான எக்நாத் காட்சேயின் பெயர், இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிமின் கராச்சி தொலைபேசி இலக்கத்தை வைத்து, இந்தியாவைச் சேர்ந்த மனிஷ் பங்கலே என்ற ஹக்கர் ஒருவரே, தான் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் மனைவியான மெஜாபீன் ஷேக்கைப் போல நடித்து, பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுடன் தொடர்புகளைப் பேணியே இந்த விவரங்களைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தாவூத் இப்ராஹிமின் அடிக்கடி அழைக்கப்படும் இலக்கங்களில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஓர் இலக்கமும் டுபாயைச் சேர்ந்த நான்கு இலக்கங்களும் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து இலக்கங்களும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வடோதரா பொலிஸாரை அணுகிய போது, அவர்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், அவரிடமிருந்தும் பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) அதிகாரிகள் சிலர் கடந்த வாரம் சந்தித் போதும், அதன் பின்னர் அவர்கள் தொடர்புகொள்ளவில்லையெனத் தெரிவித்த அவர், தற்போது இவ்விவரங்கள், தேசிய புலனாய்வு முகவராண்மையிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது பெயர் வெளியிடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமைச்சர் காட்சே, கடந்த ஓராண்டாகவே இந்த இலக்கத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த ஓராண்டில், எந்தவொரு வெளிநாட்டு அழைப்பை மேற்கொள்ளவோ அல்லது பெறவோ இல்லை என்பதற்கான ஆதாரத்தைத் தான் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .