2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தீ விபத்தில் தாய்லாந்து பாடசாலை மாணவிகள் 17 பேர் உயிரிழப்பு

Shanmugan Murugavel   / 2016 மே 23 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு தாய்லாந்திலுள்ள பாடசாலையொன்றின் உறங்கும் அறையில் ஏற்பட்ட தீயினால், குறைந்தது 17 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட குறித்த மாணவிகள், உறங்கிக் கொண்டிருந்த போதே, நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலையில், வறுமையான பழங்குடியினரைச் சேர்ந்த மாணவிகளே கல்வி கற்பதாக அறிவிக்கப்படுகிறது. சியாங் றாய் என்ற இடத்திலுள்ள பிதகியார்ட் வித்தய பாடசாலை என்ற குறித்த பாடசாலையில், உறங்கும் அறையில் 38 மாணவிகள் உறங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில், உயிரிழந்த 17 பேரைத் தவிர, இருவரை இன்னமும் காணவில்லையெனத் தெரிவிக்கும் அதிகாரிகள், மோசமாகக் காயமடைந்த இருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இங்கு தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து, விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், காணாமற்போன இரு மாணவிகளையும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .