2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

நான்கு கப்பல்களின் தடை நீக்கப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கான ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையால் தடை விதிக்கப்பட்ட 31 கப்பல்களில் 4 கப்பல்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலையீட்டினாலேயே இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கான ஆயுதங்களைக் கடத்தும் நிறுவனமொன்றுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட மேற்படி 31 கப்பல்களும், இம்மாதம் 2ஆம் திகதி, பாதுகாப்புச் சபையால் தடைக்குள்ளாக்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த கப்பல்கள் மீதான தடையை நீக்க உதவுமாறு, அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்தே, குறித்த நான்கு கப்பல்களினதும் தடை நீக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல்களில், வடகொரியாவைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை சீனா வழங்கிய பின்னரே, தடை நீக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக சீனா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .