2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தடுத்துவைத்துச் சித்திரவதை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிலும் சிரியாவிலும் காணப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல்கள், நைஜீரியாவில் காணப்படும் போகோ ஹராமின் அச்சுறுத்தல் உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் அச்சுறுத்தல்களுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, நூற்றுக்கணக்கான சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட இக்கண்காணிப்பகத்தின் புதிய அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஈராக், இஸ்ரேல், பலஸ்தீனம், நைஜீரியா, சிரியா ஆகிய நாடுகளே, இவ்வாறு முக்கியமான நாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆயுத முரண்பாடுகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராம் போன்ற ஆயுதந்தாங்கிய தீவிரவாதக் குழுக்களையும் எதிர்கொள்வதற்கு அரசாங்கங்கள் முயலும்போது, மிகவும் ஆபத்தான போக்கொன்று உருவாகுவதை நாம் காண்கிறோம்" என, சிறுவர்களின் உரிமைகளுக்கான  அக்கண்காணிப்பகத்தின் பணிப்பாள் ஜோ பெக்கர் தெரிவித்தார்.

ஆறாவது ஆண்டாகப் போர் இடம்பெற்றுவரும் சிரியாவில், 1,433 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, அவர்களில் 436 பேர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஈராக்கில், 58 சிறுமிகள் உட்பட 314 சிறுவர்கள், பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களாக உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும், அக்கண்காணிப்பகம் கோரியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X