2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

‘பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மிர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’

Editorial   / 2017 ஜூலை 18 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மிர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்று, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.  

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மிர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பதிலடியைக் கொடுத்து வருகின்றார். 

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மிரின் ராவால்கோட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒசாமா அலி என்பவரின் சிறுநீரகத்தில், கட்டி ஏற்பட்டு, சிரமப்பட்டு வருகின்றமையால், டெல்லியில் சிகிச்சை பெறுவதற்கு, அவர் கோரி வருகின்றார்.  

இந்நிலையில், சுஷ்மா சுவராஜின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான், சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் அவருக்கு விசா கொடுப்போம். பாகிஸ்தானிடம் இருந்து, கடிதம் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தானைச் சேர்ந்த நோயாளிகள், பெரும்பாலும் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவுக்குச் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு, இந்தியா எந்தவொரு நெருக்கடியையும் கொடுக்காது விசா வழங்கி வருகின்றது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபின் வெளிவிவகார ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கொடுக்கும் கடிதத்தைக் கொண்டே, இந்தியா, இதுவரையில் விசா வழங்கி வருகிறது.  கருணை அடிப்படையில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அது மாறுபட்டது. குல்பூஷண் ஜாதவின் தாயார், அவரைப் பார்க்க, பாகிஸ்தான் செல்ல, விசா வேண்டும் என்று கோரியுள்ளார். 

எனினும், இது தொடர்பாக, இந்திய வெ ளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எழுதிய கடிதத்துக்கு, வெகு நாட்களுக்குப் பின்னரே பதில் தரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .