Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமபாத்தின் பிரதான நெடுஞ்சாலையில், இரண்டு வார இருப்பை ஆயிரக்கணக்கான அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைவிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், பாகிஸ்தானின் வீதிகளை முடக்கும் மற்றும் பிரதமர் இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்றும் திட்டம் பி என அவர்கள் அழைப்பதை அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நகர்வின் அடுத்த கட்டத்தை ஆரம்பிப்பதற்காக தனது ஆதரவாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புமாறு ஆர்ப்பாட்டத் தலைவர் ஃபஸல் –உர்-ரஹ்மான் நேற்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமானது அரசாங்கம் இராஜினாமா செய்து புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை தொடரும் என ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸில் கட்சியின் தலைவருமான ஃபஸில்-உர்-ரஹ்மான் கூறியுள்ளார்.
தென் நகரமான கராச்சியிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி பேரணியை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த மாதம் 31ஆம் திகதி இஸ்லாமபாத்தை அடைந்து, ஏறத்தாழ இரண்டு வாரங்களாக இருப்புப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
சில பிரதான நெடுஞ்சாலைகளை முடக்கப் போவதாக ஃபஸில்-உர்-ரஹ்மான் எச்சரித்துள்ள நிலையில், இது நாட்டின் ஏனைய பகுதிகளுடனான பிரதான நகரங்களின் தொடர்புகளைத் துண்டுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தானைத் தொடுக்கும் மேற்கு குவாட்டா சமன் நெடுஞ்சாலையை ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸில் கட்சியின் கொடிகளைக் கொண்டிருந்த தொண்டர்கள் முடக்கியிருந்த நிலையில், பொருட்களுடன் காணப்பட்ட லொறிகளின் நீண்ட வரிசை அமைந்திருந்தது.
தங்களது தொண்டர்களால் ஏற்கெனவே வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் அவர்களுடன் அமரப் போவதாக இஸ்லாமபாத்திலுள்ள தற்காலிக முகாமொன்றை அகற்றிய ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸில் கட்சியின் ஆதரவாளரொருவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
03 Jul 2025
03 Jul 2025