2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பெண்களிடம் சேஷ்டை புரிந்த 14 பேரில் இருவர் கைது

Editorial   / 2017 மே 30 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, இரண்டு இளம்பெண்கள் மீது பாலியல் ரீதியான சேஷ்டைகளை மேற்கொண்டு, அந்தக் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு இளைஞர்களை, இந்தியப் பொலிஸார், நேற்று (29) கைது செய்துள்ளனர். 

உத்தரப் பிரதேசத்தின் ரம்பூர் மாவட்டத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்கள் இருவர் மீது, அவ்வழியே மோட்டார் சைக்கிள்களில் அமர்ந்திருந்த 14 இளைஞர்கள், பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் அடங்கிய காணொளி, இணையத்தளங்களில் சமீபத்தில் வெளியாகியிருந்தது. 

காணொளில் இருக்கும் இளைஞர்களது முகங்கள் தெளிவாகக் காணப்படவில்லை என்றும் மற்றைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .