2021 மே 06, வியாழக்கிழமை

பொது நிகழ்வை இரத்துச் செய்தார் ஆங் சான் சூ கி

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த, மியான்மார் அரச தலைவி ஆங் சான் சூ கி, அவஸ்திரேலியப் பிரதமரை நேற்று (19) சந்தித்த போதிலும், அதன் பின்னர் இடம்பெறவிருந்த பொது நிகழ்வை இரத்துச் செய்தார். அந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டமைக்கு, சூ கியின் உடல்நிலையே காரணமாகக் குறிப்பிடப்பட்டது.

மியான்மாரின் ராக்கைனில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, மியான்மார் அரசாங்கம் மீதும் அந்நாட்டு இராணுவம் மீதும், மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற சூ கியின், சர்வதேச ரீதியான பல பட்டங்கள், இதுவரை மீளப்பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற அவர் மீது, வழக்குத் தொடரப்பட வேண்டுமென, அவுஸ்திரேலியாவிலுள்ள றோகிஞ்சா முஸ்லிம்களின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், இராஜதந்திரிகளுக்கான சட்டவிலக்கீட்டை அவர் கொண்டுள்ளார் என, அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, மனித உரிமைகள் தொடர்பான தனது கருத்துகளை, பிரதமர் முன்வைத்தாரெனத் தெரிகிறது.

அச்சந்திப்பு இடம்பெற்றுச் சில மணித்தியாலங்களிலேயே, குறித்த பொது நிகழ்வு இடம்பெறவிருந்தது. அதில், சூ கி உரையாற்றவிருந்ததோடு, பொதுமக்களிடமிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவிருந்தார். இந்நிலையிலேயே, அது திடீரென இரத்துச் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .