2021 மே 08, சனிக்கிழமை

பலஸ்தீனத்தில் இரு வேறு சம்பவங்களில் இரு பலஸ்தீன சிறுவர்கள் சுட்டுக் கொலை

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலியப் படைகளுக்கும் பலஸ்தீனர்களுக்குமிடையில் அதிகரித்துவரும் முரண்பாட்டு நிலைமை காரணமாக, பலஸ்தீனத்தைச் சேர்ந்த இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள், 24 மணிநேர இடைவெளிக்கும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவமொன்றில், 13 வயதான பலஸ்தீன சிறுவனொருவன், பெத்தலகேமிலுள்ள அகதிகள் முகாமுக்கு அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இஸ்ரேலியப் படையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலிலேயே இவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு, அவனது மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவமொன்றில், 18 வயதான பலஸ்தீன சிறுவனொருவன், மேற்குக் கரையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தான்.

இதேவேளை, இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல் நடத்திய பலஸ்தீனர்கள் இருவரின் இரண்டு வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தரைமட்டமாக்கியுள்ளதுடன், இஸ்ரேலியர்கள் பயணித்த பஸ் மீது புல்டோஸர் மூலம் தாக்குதல் நடத்திய மற்றொரு பலஸ்தீனரின் வீடும் முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமமாக, ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பும் அதிகளவு அதிகரித்துள்ளது.

ஜெருசலேம் பழைய நகரத்துக்குச் செல்வதற்கு, பலஸ்தீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியப் பொலிஸாருக்குமிடையிலான முரண்பாட்டு நிலைமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X