2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பல்மைராவைக் கைப்பற்றியது சிரிய இராணுவம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 27 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த நாட்களில் இடம்பெற்ற தீவிர மோதல்களையடுத்து, ரஷ்ய வான் சக்தியினால் ஆதரவளிக்கப்பட்ட சிரிய அரசாங்கப் படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் இடமிருந்து பழைமையான நகரமான பல்மைராவை கைப்பற்றியுள்ளதாக அரச ஊடகமும் கண்காணிப்புக் குழுவொன்றும் தெரிவித்துள்ளன.

இராணுவமும் அதன் நட்புப் போராளிகளும் பல்மைரா நகரத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக இராணுவ மூலாமொன்றை மேற்கோள்காட்டி சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலையிலும் நகரத்தின் கிழக்குப் பகுதியில் துப்பாக்கி மோதல்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக தெரிவித்த பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம், எனினும் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பெரும்பாலான படைகள் பின்வாங்கி விட்டதாக கூறியுள்ளது.

இதேவேளை, பல்மைரா நகரத்தின் அயற் பிரதேசங்களில், இராணுவமானது நிலக்கண்ணி வெடிகளை தற்போது அகற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு சிரியாவில் மோதல் ஆரம்பிக்கமுன், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தலமாக இருந்த பல்மைராவை, கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X