2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

புளோரன்ஸ் சூறாவளியைத் தொடர்ந்து மழை பெய்கிறது

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வட, தென் கரொலைனா மாநிலங்களைத் தாக்கிய புளோரன்ஸ் சூறாவளியின் நேரடித் தாக்கம் குறைவடைந்துள்ள போதிலும், அப்பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெரும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கரொலைனா மாநிலம், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின் படி, 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர், வட கரொலைனாவில் உயிரிழந்தனர்.

வட கரொலைனாவில் மாத்திரம், கடந்த வியாழக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை, 100 சதமமீற்றர் மழையை, இச்சூறாவளி கொண்டுவந்துள்ளது.

இம்மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து, 900க்கும் மேற்பட்ட மக்கள் காப்பாற்றப்பட்டதோடு, 15,000 பேர், தொடர்ந்தும் மாநிலத்தின் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கரொலைனா மாநிலம், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்தாலும், ஏறத்தாழ மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில், காற்று வீசிய வண்ணமுள்ளதுடன், அதன் வேகம் அதிகரிக்கலாமெனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--