Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில், 2 பெண்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்தால், கடுமையான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பழைமைவாதக் கட்சித் தலைமைக்கான போட்டியில், தற்போதைய உள்விவகார அமைச்சரான தெரேசா மேயும், சக்தி அமைச்சரான அன்ட்ரியா லீட்சம்மும் காணப்படுகின்றனர். இவர்களிலொருவர் அக்கட்சியின் தலைவியாக வருவர் என்பதோடு, பிரதமராகவும் மாறுவர்.
இந்நிலையில், டைம்ஸ் நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்த அன்ட்ரியா லீட்சம், தெரேசா மே-க்குப் பிள்ளைகள் இன்மை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
‘தனக்குக் குழந்தைகள் இல்லை என்பது குறித்து அவர், மிகவும் கவலையாக இருப்பாரென நான் உறுதியாக நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ‘தாயாக இருப்பதன் மூலம், எங்களுடைய நாட்டின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு இருக்கிறதென நான் உண்மையாகவே நினைக்கிறேன். அவருக்கு (தெரேசா மே) மருமகள்கள், மருமகன்கள், ஏராளமான உறவுகள் இருப்பர் என நினைக்கிறேன். ஆனால், என்னுடைய பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் கிடைக்கப் போகின்றனர். அடுத்ததாக என்ன நடக்கிறது என்பதில், அவர்கள் நேரடியாகப் பங்கு வகிப்பர்” என அவர் தெரிவித்தார்.
அவரது கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு, அவர் தலைவராக வந்தால், கட்சியிலிருந்து விலகப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருபது பேர் தெரிவித்துள்ளதாக, டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago