Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 ஜூலை 08 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கைது' விவகாரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உலகின் முன்னணி செல்வந்தரான எலான் மஸ்க் சீண்டியுள்ளார்.
அதாவது, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதி ட்ரம்பின் பெயர் உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஜனாதிபதியாக இருப்பதால் ட்ரம்ப் பெயர் அந்த ஆவணங்களில் இருந்து வெளியாகாமல் உள்ளது என்றும் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (07) அன்று தனது எக்ஸ் பதிவில் மஸ்க் கூறும்போது, “இப்போது என்ன நேரம். அங்கு பாருங்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நேரம் மீண்டும் 12 மணியாகிவிட்டது. கைது விவகாரம்’’ என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள படத்தில் அதிகாரப்பூர்வ ஜெப்ரி எப்ஸ்டீன் கைது நேரம்: 0 0 0 0 என்று கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் இந்த பதிவு அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago