Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாத் தலைநகர் ஜகார்த்தாவில், ஜகார்த்தா ஆளுநர் பஸுகி தியாகஜ புரனமா மீதான மதநிந்தனை விசாரணை ஆரம்பித்தது. இந்த நிலையில், குரானை அவமானப்படுத்த எண்ணியிருக்கவில்லையென விசாரானையின் ஆரம்பத்தில் கண்ணீர் மல்கிய ஆளுநர் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், மதச் சுதந்திரத்துக்கான சோதனையாக குறித்த விசாரணையாக பார்க்கப்படுகிறது.
சீனக் கிறிஸ்தவரான புரனமாவை சிறையிலடைக்கக் கோரும் 100 வரையான முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள், விசாரணை இடம்பெற்ற நீதிமன்றத்துக்கு வெளியே, "கடவுள் சிறந்தவர்" எனக் கோஷமிட்டிருந்தனர். புரனமாவை கைது செய்யவும், அடுத்தாண்டு பெப்ரவரியில் அவரை மீளத் தெரிவுசெய்ய வேண்டாம் என வாக்காளர்களைக் கோரியும், இவ்வாண்டு நவம்பர் மாதமும் இம்மாதமும் கடும்போக்குவாதிகளின் தலைமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் புரிந்திருந்தனர். இதனால், விசாரணைக்கு கடும் பாதுகாப்பை அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், அரசியல் பிரசாரத்தின்போது தனது எதிரணியினர் குரான் பயன்படுத்துவதைப் பற்றிக் கூறும்போது, அவமானப்படுத்த எண்ணியிருக்கவில்லையென நீதிமன்றத்தில் புரனமா கூறியுள்ளார். இது தவிர, தான் தவறெதனையும் செய்யவில்லையெனத் தெரிவித்துள்ள புரனமா, தனது கருத்துகளுக்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
8 minute ago
33 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
34 minute ago
44 minute ago