2021 ஜனவரி 27, புதன்கிழமை

மரண தண்டனை குறித்து பரிசீலனை: துருக்கி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி ஜனாதிபதி றெசெப் தயீப் ஏர்டோவானின் அரசாங்கத்தை தோற்கடிக்க முயன்ற தோல்வியடைந்த இராணுவப் புரட்சியையடுத்து, மீண்டும் மரணதண்டனையை கொண்டுவருவது குறித்து துருக்கி பரிசீலிப்பதாக ஏர்டோவான் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் கூடிய சனத்திரளானது மரண தண்டனையைக் கோரிய நிலையில், ஜனநாயகத்தில், மக்கள் சொல்வதை அடிப்படையாகக் கொண்டே  முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்த ஏர்டோவான், தமது அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் பேசி முடிவுக்கு வருமென தான் நினைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவப் புரட்சியில் பலியானவர்களின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர், தனது ஆதரவாளர்களிடையே கருத்துத் தெரிவித்த ஏர்டோவான், தாங்கள் இனியும் இதைத் தாமதப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், ஏனெனில், இந்த நாட்டில் இராணுவப் புரட்சியை மேற்கொண்டவர்கள், அதற்கான விலையைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தை மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ், 2004ஆம் ஆண்டு மரண தண்டனையை துருக்கி ஒழித்திருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தை பெறுவது குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்கள், வேறு காரணிகளால் தடங்கலுக்குள்ளாகிய நிலையில், மரண தண்டனையை மீளக் கொண்டுவருவது பேச்சுக்களை மேலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .