Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுடையை ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சென்று, நூற்றுக்கணக்கான ஹஜ் யாத்திரிகர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணையொன்றுக்கு ஐ.நா உத்தரவிட வேண்டுமென, ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றெளஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவின் மெக்காவுக்கு 3 மைல்கள் தொலைவிலுள்ள மினாவிலிருந்து, மெக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாத்திரிகர்களிடையே நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக, கடந்த வியாழன்று 769 பேர் உயிரிழந்திருந்தனர். மேலதிகமாக, 934 பேர் காயமடைந்திருந்தனர்.
உயிரிழந்தவர்களில் 131 பேர் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களென ஈரான் தெரிவித்துள்ளதோடு, உயிரிழப்புகளுக்கு சவூதி அரேபியா மேல் குற்றஞ்சாட்டி வருகின்றது.
இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பாகவும் இவ்வாண்டு ஹஜ் கடமைகளில் இடம்பெற்ற இது போன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெய அவர் கோரிக்கை விடுத்தார்.
தவிர, இவ்வாறான அதிக சனத்தொகையுள்ள கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் திறன் சவூதி அரேபியாவுக்குக் கிடையாது எனவும், ஹஜ் யாத்திரையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு, இஸ்லாமிய நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும், ஈரானின் பிரதான மதத் தலைவரான அயதொல்லா மொஹமட் இமாமி கஷானி குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
06 Jul 2025