Gopikrishna Kanagalingam / 2016 ஜூலை 10 , பி.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
1987ஆம் ஆண்டு முதல் சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் றொபேர்ட் முகாபே-க்கு எதிரான எதிர்ப்புகள், அதிகரித்து வருகின்றன. அவருக்கான எதிர்ப்பில், சமூக ஊடக இணையத்தளங்கள், புதிதாக இணைந்துள்ளன.
பல தசாப்தங்களாக நிலவும் அவரது அடக்குமுறையான ஆட்சிக்கு, பொதுமக்களின் பகிரங்கமான எதிர்ப்பென்பது, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக பொருளாதாரமானது மிக மோசமான நிலைமையை அடைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் எதிர்ப்பானது அதிகரித்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதியின் உடல்நிலையும், மோசமடைந்து வருவதோடு, அவரது கட்சிக்குள், அடுத்த ஜனாதிபதி குறித்த போட்டிகளும் அதிகரித்துள்ளன.
தற்போதுவரை, தனிநபர்களாக இருந்து, எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படும் நிலையில், அவை கூட்டான எதிர்ப்புகளாக மாறும் ஆபத்துக் காணப்படுவதாக, சிம்பாப்வேயைச் சேர்ந்த ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேசிய ஹர்த்தாலில், பல வணிக நிறுவனங்களும் கடைகளும் பாடசாலைகளும் மூடப்பட்டதோடு, பொதுப் போக்குவரத்தும் அரச திணைக்களங்களும் நீதிமன்றங்களும் கூட, மூடப்பட்டிருந்தன.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. இதனால் 113 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவற்றையடுத்து, சமூக ஊடக இணையத்தளங்களில் முகாபே-க்கு எதிரான எதிர்ப்பு, அதிகரித்து வருவதோடு, எதிர்ப்புகளை ஒன்றுகூட்டுவதற்கான கருவியாகவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
17 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 Oct 2025