2021 மே 10, திங்கட்கிழமை

200 முஸ்லிம்கள் கைதாகினர்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைவதற்கு எண்ணத்தைக் கொண்டிருந்தார்கள் அல்லது அக்குழுவில் பரிவினை வெளிப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக, மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பித்த இந்தக் கைது நடவடிக்கைகள், உஸ்பெகிஸ்தான் தலைநகர் தஷ்கென்ட் அல்லது அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாக, சுயாதீன உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான முன்னிலைக் குழு தெரிவித்தது. தினமும் இடம்பெற்ற சோதனைகள், தேடுதல்களின் பின்னரே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக அக்குழு, தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோரின் பெரும்பாலானோர், ரஷ்யா, துருக்கி, மேற்கு ஐரோப்பாவிலிருந்து பணிபுரிய வந்தவர்கள் எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு எந்தவிதமான சம்பந்தத்தையும் கொண்டவர்கள் அல்லர் எனவும் தெரிவிக்கின்றனர்.

'உண்மையான 5 ஆயுததாரிகளைக் கண்டுபிடித்த பின்னர், அப்பாவியான 50 பேரைக் கைது செய்வர். அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, தொடர்புள்ளதாக ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுவர்" என அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X