2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யுத்தநிறுத்தத்துக்கு மத்தியில் வான் தாக்குதல்களில் 18 பேர் பலி

Editorial   / 2020 ஜனவரி 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் நகரத்திலுள்ள சந்தையொன்றையும், கைத்தொழில் வலயமொன்றையும் வான் தாக்குதல்கள் தாக்கியதில் குறைந்தது 18 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல்களை ரஷ்ய, சிரிய அரசாங்க விமானங்கள் நடத்தியதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

ரஷ்யா, துருக்கியால் பேரம்பேசப்பட்டு இம்மாத ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்துக்கு மத்தியிலேயே வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சிரிய எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதிப் பலம்வாய்ந்த இடமே வடமேற்கு சிரிய மாகாணமான இட்லிப்பின் தலைநகர் இட்லிப் ஆகும்.

அல்-ஹலால் சந்தையையும், இட்லிப் நகரத்திலுள்ள கைத்தொழில் வலயத்தையும் குண்டுத் தாக்குதல்கள் நேற்றுத் தாக்கியதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஓட்டுநர்கள் கார்களுக்குள் இருக்கையில், கைத்தொழில் வலயத்திலிருந்த சில கார்கள் தீயால் சூழப்பட்டதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களுள் சிறுவர்களும், மீட்புப் பணியாளர்களும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இட்லிப் மாகாணத்திலுள்ள ஏனைய பகுதிகளும் இலக்கு வைக்கப்பட்டதாக எதிரணிக்கு ஆதரவான ஸ்டெப் செய்தி முகவரகம் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--