2021 மே 08, சனிக்கிழமை

யேமன் திருமண மண்டபம் தாக்கப்பட்டதை சவூதி கூட்டணி நிராகரிப்பு

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்கு யேமனில் திருமண மண்டபம் மீது நடாத்தபப்ட்ட விமானத் தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட குறைந்தது 138 பேர் கொல்லப்பட்டிருந்தநிலையில், யேமனில் போர் புரியும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாம் தாக்குதலை நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படும் பகுதியில், கடந்த மூன்று நாட்களாக கூட்டணி படைகளால் எந்தவொரு வான் தாக்குதலும் நடாத்தப்படவில்லை என கூட்டணியின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் அகமட் அல்-அசேரி தெரிவித்துள்ளதுடன். இது முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (28) அல்-வகிஜா கிராமத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருந்ததாக யேமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். காயமடைந்தவர்களுடன், இறந்தவர்களின் சடலங்கள், ஹூதி போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் துறைமுக நகரான மொகாவுக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.

ஹூதி போராளிகளுடன் இணைந்த ஒருவர் தனது திருமண விருந்துபசாரத்துக்கு அல்-வகிஜா கிராமத்தில் அமைத்திருந்த கூடாரங்களையே இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தனர்.

சவூதி அரேபியாவுக்கு செல்ல முன்னர் யேமன் ஜனாதிபதி அப்ட்-ரப்பு மன்சூர் ஹாடி, இந்த அல்-வகிஜா கிராமத்தையே தளமாக கொண்டிருந்தார். அதன்பின் மார்ச் மாதம், ஹூதி போராளிகள் இப்பிரேதேசத்தை கைப்பற்றியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X