2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

யேமன் படைவீரர்கள் 48பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனின் துறைமுக நகரான ஏடனிலுள்ள இராணுவத் தளமொன்றின் மீது, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் உள்ளூர்ப் பிரிவின் தற்கொலைதாரியொருவர் நடத்திய தாக்குதலில், குறைந்தது 48 யேமனிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, 30 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சௌலபான் தளத்தின் வாசலில், தமது சம்பளங்களைப் பெறுவதற்காக படையினர் நேற்றுக் (10) காத்துக் கொண்டிருந்தபோதே, தற்கொலைதாரி தனது வெடிபொருட்களை வெடிக்க வைத்ததாக பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .