Shanmugan Murugavel / 2015 நவம்பர் 22 , மு.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் எல்லைப் பகுதிக்கு அண்மையில் உள்ள கமரூனின் வடக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான குண்டு வெடிப்புக்களில் குறைந்தது நான்கு பொதுமக்களும் நான்கு தற்கொலை குண்டுதாரிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் ஆயுதக்குழுவான போகோ ஹராமின் உறுப்பினர்கள் என நம்பப்படுபவர்களால், போட்டோகொல் நகரத்தின் புறநகர்ப்பகுதியான நிகு கிராமத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
லேமரியில் உள்ள பாரம்பரியத் தலைவரின் வீட்டிலேயே முதலாவது தற்கொலைதாரி தனது குண்டை வெடிக்க வைத்ததாகவும், இதில் தற்கொலைதாரி உட்பட ஐவர் கொல்லப்பட்டதாகவும் கமரூன் இராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார். நிகுவின் ஒரு பகுதியே லேமரி ஆகும்.
மேற்படி முதலாவது குண்டுவெடிப்பையடுத்து, சில நிமிடங்களின் பின்னர், மூன்று பெண் தற்கொலை குண்டுதாரிகள், முதலாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு அருகிலேயே தம்மை வெடிக்க வைத்துக் கொண்டதாகவும், ஆனால் இவர்கள் வேகமாக இயங்கியதால், அவர்களால் வேறு எவரையும் கொல்ல முடிந்திருக்கவில்லை என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
1 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Oct 2025