2020 நவம்பர் 25, புதன்கிழமை

வேண்டுமென்றே தீ மூட்டிய சந்தேகத்தில் 180 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் வேண்டுமென்றே தீ மூட்டிய சந்தேகத்தின்பேரில் 180க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தீயணைப்புச் சேவைகளில் தொண்டூழியம் செய்துவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் தற்போது பற்றி எரியும் காட்டுத் தீ சுமார் 10 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பை நாசமாக்கியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் 4.9 மில்லியன் ஹெக்டர் நிலம் தீயால் கருகியதுடன், காட்டுத் தீயால் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன; 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீச்சம்பவம் உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று பிரிட்டன் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .