Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 24 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தின் தேசியக் கொடியை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், தற்போதைய கொடியையே தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு, அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
நியூசிலாந்தின் தேசியக் கொடி, அவுஸ்திரேலிய தேசியக் கொடியைப் போன்று காணப்படுவதன் காரணமாக, அதை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, கொடிகளை வடிவமைக்கும் போட்டிகள் இடம்பெற்றன.
அதனையடுத்து, தெரிவுசெய்யப்பட்ட கொடிகளுக்கு மத்தியில் போட்டி நடத்தப்பட்டு, கொடியொன்று தெரிவுசெய்யப்பட்டது.
இரு கொடிகளுக்குமிடையிலான வாக்களிப்பு இடம்பெற்ற போது, தற்போதுள்ள கொடியே தொடர்ந்தும் தேசியக் கொடியாக இருக்க வேண்டுமென, 56.6 சதவீதமான மக்கள் வாக்களித்தனர். புதிய கொடிக்கு 43.2 சதவீதமானோரே வாக்களித்தனர்.
புதிய கொடிக்கு, தற்போதைய பிரதமரான ஜோன் கீ, அதிக ஆதரவை வழங்கியிருந்த நிலையில், அதை நிராகரித்த மக்களின் முடிவு, பிரதமருக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
28 minute ago
58 minute ago