2021 மே 10, திங்கட்கிழமை

வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமானம் அவசரத் தரையிறக்கம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, எகிப்திய பொழுதுபோக்கு பிரதேசமான குர்கதாவுக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானமொன்று பல்கேரியாவில் அவசரத் தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளது.

கருங்கடலின் கரையோர நகரமான பேர்காசிலேயே 161 பேருடன் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து பயணிகளும் விமானச் சிப்பந்திகள் குழுவும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் எந்தவிட வெடிபொருட்களும் விமானநிலையத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்த பேர்காஸ் விமானநிலையத்தின் பெண் பேச்சாளர் ஒருவர், எனினும் விமானநிலையம் இன்னும் மூடப்பட்டே இருப்பதாக கூறியுள்ளார்.  

விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வோர்ஷோவில் இருந்து குர்கதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த LLP8015 என்ற இலக்கமுடைய விமானம் அவசர தரையிறக்கத்துக்கு கோரியதாகவும் அதனையடுத்து ஜிஎம்‌டி நேரப்படி 0348க்கு பேர்காசில் தரையிறங்கியுள்ளதாக ஊடக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெடிகுண்டு இருப்பதாக விமானச் சிப்பந்திகளை எச்சரிக்கை செய்த பயணி, அற்ககோலை உள்ளெடுத்திருந்தாரா என்பதில் விசாரணை செய்யப்படுவதாக பெண் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி விமானமானது தம்முடையது அல்ல எனத் தெரிவித்த போலந்து தேசிய விமானச் சேவை எல்.‌ஓ.டி.யின் பேச்சாளர், எனினும் குர்கதாவுக்கு செல்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X