Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை, அவரது பதவியிலிருந்து நீக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு, பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. எனினும், அரசியல் ஸ்திரமற்ற நிலைமை, இன்னமும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் சட்டங்களின்படி, ஜனாதிபதியை நீக்குவதற்கான கருத்துக்கணிப்பை நடத்துவதற்கான முதற்படிக்கு, ஏறத்தாழ 200,000 கையெழுத்துகள் அவசியமாகும். சுமார் 600,000 கையெழுத்துகளை, எதிர்க்கட்சிகள் சேர்த்து வழங்கியிருந்தன.
எனினும், அந்தக் கையெழுத்துகளில் போலிக் கையெழுத்துகள் காணப்படுவதாகக் கூறிச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், தேசிய தேர்தல்கள் சபைக்கு, இவ்விடயம் அனுப்பப்பட்டது. இதில், தேவையான கையெழுத்துகளுக்கு இரண்டு மடங்கான உண்மையான கையெழுத்துகள் காணப்படுவதாக, அச்சபை அறிவித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக, கருத்துக்கணிப்பை நடத்துவதற்கு, மூன்று நாட்களுக்குள் 4 மில்லியன் கையெழுத்துகளைச் சேர்க்க வேண்டும். எனினும், அதற்கான நாள் இன்னமும் குறிப்பிடவில்லை.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தடுத்துவரும் ஜனாதிபதி மதுரோ, தொடர்ந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுவதால், ஸ்திரமற்ற ஒரு நிலைமையே ஏற்படுமென எதிர்வுகூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago